ஒன்றாரியோ சிறைகளில் கைதிகளின் மரண எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் மரணங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளது.
மாகாண பிரதம பிரேதப் பரிசோதகரின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 186 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளல், தற்கொலைகள் மற்றும் இயற்கை காரணிகளினால் இவ்வாறு மரணங்கள் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகளுக்கு போதியளவு சுகாதார வசதிகள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்களுக்கு உளச் சுகாதார ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் பதிவாகும் கைதி மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் பதிவாகும் மரணங்களை தடுப்பதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.