ஒன்றாரியோ சிறுவர் நலன்புரி முகவர் நிறுவனங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒன்றாரியோ குறைகேள் அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் உரிய முறையில் பாதுகாப்பான வகையில் தங்க வைக்கப்படவில்லை என குற்றம் சமாத்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றில் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சிறுவர்கள் தங்க வைக்கப்படும் போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பூரண கவனம் செலுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஒன்றாறியோ மாகாண குறைகேள் அதிகாரி போல் டுபே தெரிவித்துள்ளார்.
பொருத்தமற்ற வகையில் ஹோட்டல்களில் சிறுவர்கள் தங்க வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அனுமதி பத்திரமற்ற சிறுவர் நலன்புரி நிலையங்களில் சிறுவர்கள் தங்க வைக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதுகாப்பற்ற இடங்களில் சிறுவர்கள் தங்க வைக்கப்படுவதனால் அவர்களின் நடத்தை தொடர்பான பிரச்சனைகள் எதிர்காலத்தில் எழக்கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.