Reading Time: < 1 minute

கனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் அல்பானி ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் அவசர மருத்துவ உதவியாளராக பணியான்றி வந்த யாழை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

தீவிர தேடுதல் பணி
புதன் கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போன இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் காணாமல்போனவுடன் 20 படகுகளும் 50 தனி நபர்களும் இவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டதுடன் ஒன்றாரியோ மாகாண பொலிஸாரும் இவரை தேடும் முயற்சிக்கு உதவியதாக கூறப்படுகின்றது.

அவர் பயணித்த படகு ஆழமற்ற நீரில் நுழைந்ததால் வேகமாக ஓடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காஷேசெவனில் இரண்டு வாரங்கள் மட்டுமே பணிபுரிந்த இளைஞர், ஃபோர்ட் அல்பானி ஃபர்ஸ்ட் நேஷனின் அருகிலுள்ள சமூகத்திற்கு மற்றொரு துணை மருத்துவர் மற்றும் செவிலியருடன் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இளைஞர் உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.