ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பல மில்லியன் டொலர் பணத்தை விரயமாக்கியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோவிட்19 பெருந்தொற்று தடுப்பூசி கொள்வனவில் இவ்வாறு பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசிகளாக் கொள்வனவு செய்யப்பட்ட 38 வீதமான தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளன.
மாகாண அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றுகை முறைமை ஒழுங்குபடுத்தப்படாத காரணத்தினால் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய துல்லியமான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கணக்காய்வாளர் நாயகம் Bonnie Lysyk இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி தேவை தொடர்பில் மித மிஞ்சிய அளவில் மதிப்பீடு செய்த காரணத்தினால் இந்த நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
இதேவேளை, ஒன்றாரியாவில் 12 வயதுக்கும் மேற்பட்ட 82 வீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.