Reading Time: < 1 minute
கனடாவின் சில அதிவேக நெடுஞ்சாலைகளின் வேகக் கட்டுப்பாடு உயர்த்தப்பட உள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாதண்தில் இந்த வேகக் கட்டுப்பாடு அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
401 மற்றும் 403ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சில நெடுஞ்சாலைகளில் இவ்வாறு வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளது.
இதுவரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் என்ற வேகக் கட்டுப்பாடு மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் என உயர்த்தப்பட உள்ளது.
ஒன்றாரியோவின் அநேகமான அதிவேக நெடுஞ்சாலைகள் மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் பாதுகாப்பான முறையில் செலுத்தக்கூடிய வகையில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் பிராம்பீட் சர்காரீயா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி முதல் இந்த வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.