Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

வார இறுதிக்குள் மக்கள் வந்து தடுப்பூசி போடாவிட்டால், சேமித்த தடுப்பூசி இருப்பு வீணாகலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒன்றாரியோவின் தடுப்பூசி வெளியீட்டில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசிக்கான பொதுமக்களின் விருப்பம் ஆகியவற்றால் மருந்தகங்கள் தங்கள் மொடர்னா தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்துவது என்பது கடினமாகி உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் கூறுகிறது.

ஒன்றாரியோ மருந்தாளுநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என்பதற்கு உலகளாவிய வரையறை இருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். உண்மையில் முழு நம்பிக்கையுடன் அது மற்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒட்டாவா பொதுச் சுகாதாரம், சமூக மருத்துவமனைகளில் காலாவதியாகும் அபாயத்தில் எந்த தடுப்பூசிகளும் இல்லை என்று கூறுகிறது.