ஒன்றாரியோவில் முடக்கநிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு கனேடிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு (சி.எஃப்.ஐ.பி) வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரொறொன்ரோ மற்றும் பீல் பிராந்தியம் 100 நாட்களாக முடக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த நாட்களில், பல சிறு வணிகங்கள் மூடப்பட்டு வருமானத்தை இழந்துள்ளன.
மாகாணத்தில் 30 சதவீதம் சிறு வணிகங்கள் நிரந்தரமாக மூடப்படுவது குறித்து கவலைப்படுவதாக வெளியீடு கூறுகிறது.
இப்போது, கனேடிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு முதல்வர் ஃபோர்டுக்கு முடக்கநிலை மற்றும் கொவிட்-19 விதிமுறைகளான விரைவான சோதனைகள் மற்றும் தொடர்புத் தடமறிதலுடன் மாற்றுமாறு அழைக்கிறது.
சிறிய சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் வால்மார்ட் மற்றும் கோஸ்ட்கோவில் இதே போன்ற தயாரிப்புகளை வாங்குவதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஒன்றாரியோ சிறு வணிக ஆதரவு மானியத்தை மாற்றியமைக்க மாகாணத்தை நம்ப வைப்பதை இந்த புகார் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முடக்கநிலை தொடங்கியதிலிருந்து 80 சதவீத நேரம் மூடப்பட்ட உள்ளூர் வணிகங்களுக்கு 10,000- 20,000 டொலர்கள் ஒரே கொடுப்பனவு உதவாது என்று கனேடிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு வாதிடுகிறது.