ஒன்றாரியோவில் பெற்றோலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டின் பின்னர் பதிவான அளவிற்கு விலை ஏற்றம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடிய மலிவு சக்தி வள அமைப்பின் தலைவர் டேன் மெக் டியாகு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 14 சதங்களாக உயர்த்தப்பட உள்ளது.
ஒன்றாரியோவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1.79 டொலர்களுக்கும் மேல் உயர்வடையும் சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
குபெக் மாகாணத்தில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1.88 டொலர்களை விடவும் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கார்பன் வரி அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணிகளினால் இவ்வாறு விலை உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.