கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளுக்கு அருகாமையில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு அருகாமையில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் நகர நிர்வாகங்கள் இது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பிரம்டனில் இந்து ஆலயம் ஒன்றிற்கு எதிரில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர்.
எனினும், இவ்வாறு போராட்டம் நடத்துவதற்கு தடை விதிப்பதானது அவர்களது கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையிலானது என கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பற்றிக் பிரவுன் இவ்வாறான தடை விதிப்பது தொடர்பிலான சட்டத்தை முன்மொழிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு சட்டத்தை உருவாக்குவது குறித்து நகர நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பிரவுன் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.