ஒன்றாரியோவில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொக்வெலியில் ஒன்றாரியோ ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிலர் நீரில் மூழ்கி தத்தளிப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரையும், சிறுவன் ஒருவனையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எவ்வாறெனினும், சிகிச்சைகள் பலனின்றி குறித்த இளம் பெண் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சிறுவனும் யுவதியும் உறவினர்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் நீரில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.