Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் தீயணைப்புப் படையினருக்கு விசேட சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் இடத்தில் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி நலன் என்பனவற்றை அதிகளவில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் பல்வேறு தியாகங்களை செய்வதாகவும் அவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை விடவும் தீயணைப்பு படையினர் அதிகளவில் புற்று நோய்களினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தீயணைப்புப் படையினருக்கு புற்று நோய்களுக்கான சுகாதார காப்பீடுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் தீயணைப்புப் படையினருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.