Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

சினிமா பாணியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள் கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் இந்த கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட கருப்பு நிற அவுடு கார் குறித்த பெண்ணுக்கு சொந்தமானது எனவும் இந்த கார் களவாடப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டெய்லர் அன்னா கோபின்கர் (Taylor-Anna Kobinger) என்ற கியூபெக்கைச் சேர்ந்த பெண்ணின் கார் இவ்வாறு களவாடப்பட்டிருந்தது.

இணையதளத்தில் காரை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்திருந்தபோது நபர் ஒருவர் காரை பரீட்சார்த்தமாக ஓட்டி பார்ப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் அந்தக் காரை களவாடி சென்றுள்ளதாகவும் குறித்த பெண் தெரிவிக்கின்றார்.

களவாடப்பட்ட தனது கார் 550 கிலோமீட்டர் தொலைவில் இடம் பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்பு பட்டிருப்பதை கண்டறிந்து ஆச்சரியமடைந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

ஷாப்பிங் மாலில் கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் இரண்டு பேருக்கு தொடர்பு உண்டு என போலீசார் தெரிவிக்கின்றனர்.

பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.