Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் உணவு வங்கிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஒன்றாறியோ மாகாணம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள உணவு வங்கிகளில் அதிக அளவான மக்கள் பயன் பெறுவதற்காக முயற்சிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோவில் அமைந்துள்ள டெய்லி பிரட் புட் பேங்க் என்ற உணவு வங்கியில் கடந்த ஆண்டில் 3.75 மில்லியன் மக்கள் பயன் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் வருடாந்தம் உணவு வங்கியில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை வெறும் ஆறு லட்சமாக காணப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அண்மைய ஆண்டுகளாக உணவு வங்கிகளில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு உணவு வங்கியை தங்கி இருப்பவரின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிலும் கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் உணவு வங்கிகளில் தங்கி இருக்கக் கூடும் எனவும் அடுத்த ஆண்டு ஒன்றாரியோ மாகாணத்தில் சுமார் 4.2 மில்லியன் பேர் உணவு வங்கிகளில் பயன்பெறக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.