Reading Time: < 1 minute

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உண்ணிகள் காரணமாக லைம் என்ற நோய் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் வழமையை விடவும் இம்முறை லைம் நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோவில் சுமார் 13 உண்ணி வகைகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கோடை காலங்களில் குறிப்பாக பூச்சியம் பாகையை விடவும் கூடுதலான வெப்பநிலை நிலவும் போது இந்த வகை உண்ணிகள் பரவத் தொடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உண்ணிகள் கடிக்கும் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை எனவும், அவரவர் உடல் நிலையை பொறுத்து நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.