கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் டக் போர்ட் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தற்போதைய அரசாங்கம் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளார். எனினும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? என்பது பற்றிய பூரண தகவல்களை முதல்வர் டாக் போர்ட் வெளியிடவில்லை.
தமது அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் சுகாதார நலன்களை மேம்படுத்துதல் கல்வி மற்றும் உட்கட்டுமான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் போக்குவரத்து துறை மற்றும் பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்படும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.