Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணத்தின் மிடில்செக்ஸ் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வாகமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் பற்றிய தகவல்கள் ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.