ஒன்றாறியோ மாகாணத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் குடும்ப நல மருத்துவரின் சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தின் லிபரல் கட்சித் தலைவி வோனி குரோம்பே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் ஒரு குடும்ப நல மருத்துவரின் சேவையை வழங்குவதற்கான திட்டத்தை முன்மொழிய உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
கனடாவில் பொதுவாகவே குடும்ப நல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது மிகவும் சவால் மிக்கதாக காணப்படுகின்றது.
அந்த வகையில் ஒன்றாரியோவில் இந்த நிலைமை நெருக்கடியாக காணப்படுகின்றது என என தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுகாதார நலன் தொடர்பிலான தனது திட்டத்தை கிராம்பே வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, குடும்ப நல மருத்துவர்களை வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.