Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவில் விபத்து மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் கவனயீனமே என தெரிவிக்கப்படுகிறது.

கவனயீனமாக வாகனங்களை செலுத்துவதனால் வீதிகளில் அதிக அளவு விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துக்களை தடுக்கும் நோக்கில் போலீசார் ரோந்து பணிகள் அதிகரித்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை 296 பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 63 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 40 வீத அதிகரிப்பாகும்.

இவ்வாறு ஏற்பட்ட விபத்துக்களுக்கான பிரதான ஏதுவாக கவனயீனம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கவனயீனம் காரணமாக பதிவாகும் மரணங்களில் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது வாகனத்தை செலுத்தும் போது அலைபேசி பயன்படுத்துவது முற்று முழுதாக தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

கவனயீனமாக வாகனம் செலுத்துவோருக்கு முதல் தடவையாக பிடிபட்டால் ஆயிரம் டாலர்கள் அபராதமும் மூன்று நாட்கள் வாகனம் செலுத்துவதற்கான தடையும் ஒத்திவைக்கப்பட்ட அடிப்படையில் விதிக்கப்படும்.

அலைபேசிகளை பயன்படுத்தும் போது உடலில் டொம்ரமின் என்னும் ஓர் ஹார்மோன் சுரப்பதாகவும் அது பழக்க அடிமைத்துவத்திற்கு உள்ளாக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாகனம் செலுத்தும் போது மிக நிதானமாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வாகனம் செலுத்தும் போது மிக நிதானமாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.