கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நிலையில், ஒன்றாரியோவின் விடுமுறை வழிகாட்டுதல்களை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
அனைத்து ஒன்றாரியர்களும், தங்கள் பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல், விடுமுறை நாட்களை தங்கள் நெருங்கிய குடும்ப வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுமே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியாக வசிப்பவர்கள் வேறு ஒரு குடும்பத்துடன் சேரலாம்.
நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வேறு ஒரு வீட்டில் சேரலாம். எனவே விடுமுறை நாட்களில் நீங்கள் தனியாக இருக்க மாட்டீர்கள் என்று அவர் கூறினார்.
குடும்பத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, மெய்நிகர் நிகழ்வுகளை அதிகாரப்பூர்வமாக மாகாணம் பரிந்துரைக்கிறது.
இந்த கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க எங்களுக்கு உதவ பெரிய விடுமுறை விருந்துகள் அல்லது பெரிய குடும்ப விருந்துகளைத் தவிர்க்கவும் என்று இந்த ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கான மாகாண வழிகாட்டி கூறுகிறது.
ஃபோர்ட் ஒன்றாரியோவாசிகளை வெவ்வேறு பொதுச் சுகாதாரப் பகுதிகளுக்கு, குறிப்பாக உயர் பரவுதல் மண்டலங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்கக் கோரியுள்ளார். கனடாவிற்குள் பயணம் செய்ய வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.