அச்சுறுத்தும் தொற்றுநோய்க்கு மத்தியில் ஒன்ராறியோவில் உள்ள பூர்வக்குடி மக்களிடையே அதிக போதைமருந்து இறப்புகள் இரட்டிப்பாகியுள்ளன.
ஒன்ராறியோவில் உள்ள பூர்வக்குடி மக்களிடையே அதிக போதைமருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையானது கொரோனா தொற்றுநோயின் முதல் ஆண்டில் இருமடங்கானது என தெரியவந்துள்ளது.
2020 மார்ச் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையில் அதிக போதைமருந்து பயன்பாட்டினால் பூர்வக்குடி மக்களில் 116 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
அதேவேளை, இதற்கு முந்தைய ஆண்டு 50 பேர்கள் இறந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது 132 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூர்வக்குடி மக்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அதிக போதைமருந்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிக போதைமருந்து பயன்பாடு பூர்வக்குடி மக்களிடையே ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2020 மார்ச் முதல் 2021 மார்ச் வரையிலான ஓராண்டில் அதிக போதைமருந்து பழக்கத்தால் மருத்துவமனையை நாடியுள்ள பூர்வக்குடி மக்களின் எண்ணிக்கை 816 எனவும், இது கடந்த ஆண்டில் 601 என இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் பூர்வக்குடி அல்லாத மக்களில் அதிக போதைமருந்து காரணமாக மருத்துவமனையை நாடியவர்கள் என்ணிக்கை 16.4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.