தலைநகர் ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் உள்ள பெரும்பாலான சமூகங்களுக்கு, வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ, ஒட்டாவா மற்றும் மொன்றியல் ஆகியவற்றைச் சுற்றியுள்ள அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் உட்பட இரண்டு மாகாணங்களில் 70இற்க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
இந்தநிலையில், கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடுமையான வெப்பத்தை அனுபவிக்கும் ஒரு பகுதியில் உள்ள எவரும் அதிக நீரைப் பருக வேண்டும், அவர்கள் முடிந்தவரை வெயிலைத் தவிர்க்க வேண்டும்;அவர்கள் தங்கள் வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள் மற்றும் மறைப்புத்திரைகள் மூலம் மறைக்க வேண்டும்; அவர்கள் ஆபத்தில் இருக்கும் அயலவர்களையும் அன்பானவர்களையும் கவனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை 34 செல்சியஸ் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.