கனேடிய நகரமான Oshawaவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் தனது மகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்குள் கிடந்த இரண்டு உடல்கள்
Oshawaவிலுள்ள வீடு ஒன்றிற்கு சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
அங்கு சென்ற பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அங்கு ஒரு 8 வயது சிறுமியும், அவருடைய தந்தையான 38 வயது ஆணும் உயிரிழந்துகிடந்தார்கள்.
யார் அவர்கள்?
கணவர் மனைவி மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரைக் கொண்ட அந்தக் குடும்பம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கேரளாவிலிருந்து புலம்பெயர்ந்துள்ளது.
அந்த தந்தை தன் மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படுகிறது.
அந்த சிறுமியின் தாய் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த வீட்டுக்கு அருகில் வாழும் ஒரு பெண்மணி தெரிவித்துள்ளார்.
பொலிசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.