Reading Time: 2 minutes

ஒன்ராறியோவில் குற்றவியல் வழக்குகளில் ஜாமீனில் விடுவிக்கப்படுவோருக்கான நிதி உத்தரவாத நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய விதிகள் ஆகஸ்ட் 17, 2026 திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது.

Tamil Business Directory

புதிய நடைமுறையின் கீழ், நீதிமன்றம் ஒருவரை ஜாமீனில் விடுவிக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் அல்லது அவருக்காக பொறுப்பேற்கும் surety ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக உறுதியளித்திருந்தால், அந்த முழுத் தொகையும் விடுதலையான பின்னர் இரண்டு வேலை நாட்களுக்குள் பண பாதுகாப்பு வைப்பாக (cash security deposit) செலுத்தப்பட வேண்டும்.

இதற்கு முன்பு, சில release order-களில் குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது surety ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக உறுதியளித்தாலும், அந்தப் பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஜாமீன் நிபந்தனை மீறப்பட்டாலோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலோ மட்டுமே அந்தத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க முடியும். புதிய ஒன்ராறியோ சட்டம் இந்த நடைமுறையை மாற்றுகிறது.

Surety-களுக்கும் புதிய கட்டுப்பாடுகள்

ஜாமீனுக்குப் பொறுப்பேற்கும் surety-கள் தங்களது தற்போதைய தொடர்பு விபரங்கள் மற்றும் அடையாளத் தகவல்களை அரசுக்கு வழங்க வேண்டும். அவை மாற்றப்பட்டால் புதுப்பிக்கப்பட்ட தகவல்களும் வழங்கப்பட வேண்டும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தேவைகளைப் பின்பற்றத் தவறுவது ஒன்ராறியோ மாகாண சட்டத்தின் கீழ் தனியான குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கக்கூடும். இந்தத் தகவல்களை முறையாகப் பதிவு செய்வதற்காக புதிய surety database ஒன்றை உருவாக்கவும் ஒன்ராறியோ நடவடிக்கை எடுத்து வருகிறது.

சம்பளம், வங்கிக் கணக்கு, சொத்துகள் மீதும் நடவடிக்கை

ஜாமீன் நிபந்தனைகள் மீறப்பட்டு நீதிமன்றத்தால் பணம் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்ட பின்னரும் தொகையை செலுத்தாதவர்களிடமிருந்து அந்தப் பணத்தை வசூலிக்க அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

இதன்படி,

  • சம்பளத்தில் இருந்து தொகையைப் பிடித்தல் (wage garnishment)
  • வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தல்
  • சொத்துகள் மீது lien பதிவு செய்தல்
  • சில சந்தர்ப்பங்களில் சொத்துகளைப் பறிமுதல் செய்து விற்பனை செய்தல்

போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

Bill 75 எனப்படும் Keeping Criminals Behind Bars Act, 2026 சட்டத்தில், Criminal Code பிரிவு 515-ன் கீழ் வழங்கப்படும் release order-ல் குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது surety ஒரு தொகையை செலுத்துவதாக உறுதியளித்திருந்தால், அந்தத் தொகையை மாகாண விதிமுறைகளின்படி செலுத்த வேண்டும் என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஜூன் 2, 2026 அன்று Royal Assent பெற்றது.

ஒன்ராறியோ Attorney General Doug Downey தலைமையிலான அரசு, இந்த மாற்றங்கள் ஜாமீன் நிபந்தனைகளை மீறுவோருக்கு உண்மையான நிதி விளைவுகளை ஏற்படுத்தவும், பறிமுதல் செய்யப்பட்ட ஜாமீன் தொகைகளை எளிதாக வசூலிக்கவும், மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும் உதவும் எனக் கூறுகிறது.

எல்லா ஜாமீன் வழக்குகளிலும் பணம் கட்ட வேண்டுமா?

இல்லை. இதுவே இந்த அறிவிப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும்.

கனடாவின் Criminal Code-ன் கீழ் நீதிபதி அல்லது Justice of the Peace ஒருவரை நிபந்தனைகள் இல்லாமல் விடுவிக்கலாம்; நிதிப் பொறுப்பு இல்லாத release order-ஐயும் வழங்கலாம். அதேவேளை குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக உறுதியளிக்கும் release order, surety உடனான release அல்லது security deposit ஆகியவற்றையும் நீதிமன்றம் பயன்படுத்த முடியும்.

எனவே, “ஒன்ராறியோவில் ஜாமீன் பெறும் ஒவ்வொருவரும் பணம் கட்ட வேண்டும்” என்பது சரியான விளக்கம் அல்ல. நீதிமன்ற release order-ல் பணம் செலுத்துவதற்கான உறுதி இடம்பெறும் வழக்குகளில்தான் புதிய மாகாண cash-deposit விதி முக்கியமாகப் பொருந்துகிறது.

புதிய சட்டத்திற்கு எதிராக நீதிமன்ற சவால்

இதற்கிடையில், Canadian Civil Liberties Association (CCLA) மற்றும் Criminal Lawyers’ Association (CLA) ஆகிய அமைப்புகள் புதிய கட்டாய cash-bail நடைமுறைக்கு எதிராக அரசியலமைப்புச் சட்ட வழக்குத் தொடரவுள்ளதாக ஆகஸ்ட் 14 அன்று அறிவித்துள்ளன.

குற்றவியல் சட்டம் மற்றும் bail தொடர்பான அடிப்படை விதிகளை உருவாக்குவது மத்திய அரசின் அதிகாரம் என்றும், Criminal Code நீதிபதிகளுக்கு cash deposit விதிப்பதில் discretion வழங்கும் நிலையில் ஒரு மாகாணம் அதனை கட்டாயமாக மாற்ற முடியுமா என்பது நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வாதிடுகின்றன.

கனடா நீதித்துறையின் விளக்கத்தின்படி, bail தொடர்பான குற்றவியல் சட்டங்களை உருவாக்குவது மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனால் bail hearings நடத்துதல், பெரும்பாலான criminal prosecutions, bail நிபந்தனைகளை அமல்படுத்துதல் போன்ற நீதித்துறை நிர்வாகப் பொறுப்புகள் மாகாணங்களிடம் உள்ளன.

எனவே ஆகஸ்ட் 17 முதல் நடைமுறைக்கு வரும் ஒன்ராறியோவின் புதிய cash-security விதிகள் உடனடியாக செயல்படுத்தப்படவுள்ள போதிலும், அவற்றின் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடியாகும் தன்மை தொடர்பாக நீதிமன்ற சவாலும் உருவாகியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.