Reading Time: < 1 minute
அனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும், கோடையில் வன நடைபயணங்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும் இப்போதிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி வரை 115 பூங்காக்களுக்கு இலவச வார நாள் பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக மாகாணம் அறிவித்தது.
கோடை விடுமுறைக்கு செல்வோர் தேர்ந்தெடுக்கும் பூங்காக்களுக்கு தினசரி வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முடியும். ஒரு பூங்காவிற்கு மேல் செல்லக்கூடாது. எங்கும் காரை விட்டு விட்டு வெளியே செல்லக் கூடாது.
ஒன்றாரியோ பூங்காக்கள் மக்கள் தங்கள் பயணத்தையும், கொவிட் -19 இன் பரவலையும் மட்டுப்படுத்தும் பொருட்டு பார்வையிட ஒரு பூங்காவைத் தேர்ந்தெடுக்கும்போது, உள்ளூர் பகுதியில் இருக்குமாறு மக்களுக்குப் பரிந்துரைக்கிறது.