Reading Time: < 1 minute

ஒன்டாரியோ அரசு, மாகாணத்தின் குறைந்தபட்ச சம்பளத்தை அக்டோபர் மாதம் முதல் 17.60 டொலர்களாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுச் சம்பள உயர்வு ஒன்டாரியோ நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) 2.4% அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், தற்போதைய 17.20 டொலர் குறைந்தபட்ச சம்பளத்தில் 40 சதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்டாரியோவின் குறைந்தபட்ச ஊதியம், நாடில் உயர்ந்த விகிதங்களில் ஒன்றாக உள்ளது.

தற்போது, தொழிலாளர்களும், தொழில் முனைவோர்களும் நியாயமான, சமநிலையான மற்றும் கணிப்பிடக்கூடிய ஊதிய உயர்வை பெற வேண்டும்,” என தொழில், குடியேற்றம், பயிற்சி மற்றும் திறன்கள் மேம்பாட்டு அமைச்சர் டேவிட் பிச்சினி தெரிவித்தார்.

மாகாண கணக்கீட்டின்படி, வாரத்திற்கு 40 மணிநேரம் பணிபுரியும் ஒரு தொழிலாளருக்கு வருடத்திற்கு கூடுதல் 835 டொலர் வருமான உயர்வு கிடைக்கும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.