Reading Time: < 1 minute

பாடசாலை வகுப்பறைகளில், கைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் நடைமுறைகள், வரும் நவம்பர் முதல் ஆரம்பிக்கப்படுமென, ஒண்டாரியோ மாகாண அரசு அறிவித்துள்ளது.

எனினும், கல்வி, மருத்துவம் போன்ற அவசியமான தேவைகளுக்காக, கைப்பேசிகளை பயன்படுத்துவது அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்களில், 97 வீதமான பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கைபேசி பாவனை வகுப்பறைகளில் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென கூறியிருந்தனர்.

மாணவர்கள் வகுப்பில் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சமூக வலைத்தளங்களில் அல்ல என, ஒண்டாரியோ கல்வியமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.