Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டோவாவில் ஓய்வு பெற்ற தம்பதியினருக்கு பேரதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த தம்பதியினர் 55 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளனர்.

ஜாக்பாட் சீட்டிலிப்பில் இந்த தம்பதியினர் பரிசுத்தொகையை வென்றனர்.

இந்த மாதம் 11-ம் திகதி நடைபெற்ற சீட்டெடுப்பில் இவர்களுக்கு இந்த பரிசு கிடைக்க பெற்றுள்ளது.

கீத் மற்றும் டெப்ரா பாலசெக் ஆகிய தம்பதியினரே இவ்வாறு பரிசு தொகையை வென்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக லொத்தர் சீட்டுக்களை கொல்வனவு செய்வதாகவும் பொதுவாக கூடுதல் தொகையில் ஜாக்பாட் பரிசு காணப்படும் நாட்களில் சீட்டிலுப்பில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றால் என்ன செய்வோம் என்பது பற்றி சில நேரங்களில் பேசிக் கொள்வதுண்டு என இந்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்த பரிசுத் தொகையைக் கொண்டு என்ன செய்வது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.