திரைப்படங்களில் கொள்ளையர்கள் நிலக்கீழ் சுரங்கம் தோண்டி கொள்ளையிடுவதனை நாம் பார்த்திருக்கின்றோம், அதே பாணியில் கனடாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சுவரில் பாரிய துளையிட்டு திருடப்பட்டுள்ளது.
ஒட்டாவா நகரின் டவுன்கேட் சொப்பிங் பிளாஸாவில் அமைந்துள்ள Moe’s BBQ என்ற பிரபல ஹோட்டலில் இவ்வாறு துளையிட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலுக்கு அடுத்தபடியாக காணப்படும் தங்க நகையகம் ஒன்றில் கொள்ளையிடும் நோக்கில் இவ்வாறு துளையிடப்பட்டுள்ளது.
பாரியளவில் சுவரில் துளையிடப்பட்டதனால் குழாய்கள் உடைந்து நீர் வெளியேறிக் கொண்டிருந்த காரணத்தினால் தீயணைப்பு படையினருருக்குகும் தாம் அறிவித்ததாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நகையகத்திலும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
ஹோட்டலுக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டதனால் மீண்டும் திறப்பதற்கு சில காலம் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் பற்றிய எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.