Reading Time: < 1 minute

கனடாவின் ஓட்டாவாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 2952 ஆக காணப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இது 2021 ஆம் ஆண்டில் 2612 ஆகவும் 2018 ஆம் ஆண்டில் 1654 ஆகவும் காணப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் 25 முதல் 49 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வீடற்றவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் குடியேறிகள் மற்றும் ஏதிலிகள் என தெரிவிக்கப்படுகிறது.

அநேகமான வீடற்றவர்கள் வீதிகளில் உறங்குவதாகவும் இது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.