Reading Time: < 1 minute

கனடாவின் தினந்தோறும் பொலிசாரால் நூற்றுக்கணக்கான சாரதிகள், காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் (Expired Driver’s License) வாகனம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஒட்டாவா காவல்துறை தெரிவிக்கின்றனர்.

மிகைப்படுத்திக் கூறவில்லை எனவும், ALPR (Automatic License Plate Reader) கேமராக்கள் மூலம் இந்த ஓட்டுநர்களைப் பிடிப்பதாகவும் ஒண்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி மைக்கேல் பாதி கூறினார்.

பெரும்பாலான ஓட்டுநர்கள் உரிமம் காலாவதியாகி விட்டதை அறிந்துகொள்ளவே இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

2021 நவம்பரில், ஒண்டாரியோ மாகாண அரசு மின்னஞ்சல்/தொலைபேசி அறிவிப்புகளுக்கு மாறி, அச்சில் (Paper Mail) அனுப்பும் உரிம புதுப்பிப்பு அறிவிப்புகளை நிறுத்தியது.

இதன் விளைவாக, பலர் தங்கள் உரிமம் எப்போது காலாவதியாகிறது என்பதையே கவனிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

“ஓட்டுநர்கள் அதிக நேரம் செலவிடும் விஷயம், எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு போன்றவையே. ஆனால், உரிமத்தின் காலாவதி திகதி பார்ப்பதில்லை,” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.