Reading Time: < 1 minute
கனடாவின் ஒட்டோவா பகுதியில் பாரிய அளவில் போதையில் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டோவா 417 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இவ்வாறு பாரியளவு போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது ஒன்றாரியோ மாகாண போலீசார் போதை பொருட்களை மீட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 28000 டொலர் பணமும் நீக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த வாகனம் சோதனை இடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வாகனத்தில் இருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த தகவலை வழங்கிய பொது மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.