கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் பொலிஸாரின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கட்டாய தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனரக வாகன சாரதிகள் போராட்டம் நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றது.
போராட்டங்களில் ஈடுபட்ட மேலும் 47 பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடந்து போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது . வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்ட 53 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டு அகற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்காவது வாரமாக வார இறுதி நாள் போராட்டம் நேற்றும் இடம்பெற்ற போதும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக இதில் குறைந்தளவான எதிர்ப்பாளர்களே பங்கேற்றிருந்தனர். ஜனவரி 28 அன்று ஆர்ப்பாட்டம் தொடங்கிய பின்னர் முதன்முறையாக பாராளுமன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள வெலிங்டன் தெருவில் இருந்து பொலிஸார் போராட்டக்காரர்களை அகற்றினர்.