Reading Time: < 1 minute

உள்ளூர் வணிக நிறுவனமான ‘ஒஃப் தி ஹூக் மீட் வர்க்ஸ்’ (Off The Hook Meatwork’s) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சி அல்லது காட்டு எருமையின் வெட்டப்பட்ட இறைச்சியை வாங்கிய யூகோன் குடியிருப்பாளர்கள் இந்த தயாரிப்புகளில் எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டெட்ரா ஹைட்ரோகன்னா பினோலினால் மாசுபடுவதால் இந்த தயாரிப்புகளை சாப்பிட வேண்டாம் எனவும் இறைச்சி திரும்பப் பெறப்படுவதாகவும் யூகோன் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குமட்டல், உணர்வின்மை, தடுமாற்றம் மற்றும் நடைபயிற்சி சிரமம், அதிக இதய துடிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றை உணர்ந்தவர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிலர் ஒரு மருத்துவமனையில் மதிப்பீடு செய்யப்பட்டனர். சோதனைகள் மூலம், டெட்ரா ஹைட்ரோகன்னா பினோலின் தடயங்கள் அவர்களிடம் காணப்பட்டன.

இப் பொருட்கள் உள்ளூர்க் கடைகளில் இருந்து அகற்றப்பட்டன. இதை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.