Reading Time: < 1 minute

றொரன்டோவில் ஏ.ரீ.எம். இயந்திரம் பணம் எடுத்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவரிடம் நபர் ஒருவர் கொள்ளையிட்டுள்ளார்.

றொரன்டோவின் சய்னா டவுன் பகுதியில் அமைந்துள்ள ஏ.ரீ.எம். இயந்திரத்தில் இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஏ.ரீ.எம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த போது, நபர் ஒருவர் குறித்த வயோதிபரை கீழே தள்ளிவிட்டு பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.

பணத்தை கொள்ளையிட்ட நபரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் பற்றிய விபரங்கள் எதுவும் இருந்தால் அதனை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுகப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸர்ர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய முடியும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.