உலக அளவில் தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்தில் பங்களிப்புச் செய்யும் வகையில் ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகளை கனடா நன்கொடையாக வழங்கவுள்ளது.
இது குறித்த உத்தியோகபூா்வ அறிவிப்பை விரைவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிடவுள்ளார்.
ஜி-07 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகின் செல்வந்த நாடுகள் இணைந்து ஏழை நாடுகளுக்கு 100 கேடி தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளன. அதில் கனடாவின் பங்காக 10 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசித் திட்டத்துக்கு கனடா முன்னர் வழங்கிய பங்களிப்புக்களையும் உள்ளடக்கியதாக இந்தப் 10 கோடி தடுப்பூசி நன்கொடைத் திட்டம் அமையும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 50 கோடி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்கும் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், பிரிட்டன் 10 கோடி கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் என அந்நாட்டுக் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதிலும் அனைவருக்கு கோவிட் 19 தடுப்பூசி போடுவதை உறுதி செய்யும் நோக்குடன் ஜி-07 நாடுகள் இணைந்து ஏழை நாடுகளுக் 100 கோடி தடுப்பூசிகளை வழங்க உறுதி பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.