Reading Time: < 1 minute

மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான காலணியின் பெறுமதி நேற்று (செவ்வாய்க்கிழமை) முறியடிக்கப்பட்டது.

Nike நிறுவனம் 1972 இல் வெளியிட்ட Waffle Moon Shoes என்ற காலணி ஏலத்தில் 437,500 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் காலணி ஏலத்தில் பெறப்பட்ட மிக அதிகத் தொகையாக 190,373 டொலரே சாதனையாக இருந்து வந்தது.

1984 இல் இடம்பெற்ற ஒலிம்பிக் கூடைப்பந்து இறுதிச்சுற்றில் மைக்கல் ஜோர்டன் அணிந்த காலணி 2017 ஆம் ஆண்டில் அந்தத் தொகையை வசூல் செய்திருந்தது.

அதன் இருமடங்கைத் தாண்டி Nike Moon Shoe விற்பனையாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.  கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் நடால் (Miles Nadal) என்பவர் இந்த காலணியை வாங்கியுள்ளார்.

மொத்தமாக அந்த வகையான 12 காலணிகள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டதாக நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலணியைத் தனது சொந்தக் காட்சியகத்தில் வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நடால் அறிவித்துள்ளார்.