எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழகம் விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி தனது குழுவினருடன் 3 நாட்களில் 3,440 மீட்டர் உயரத்தை கடந்துள்ளார்.
2021-ம் ஆண்டில் 155 அடி உயர மலை உச்சியிலிருந்து கயிறு மூலம் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு, அவர் 58 விநாடிகளில் இறங்கி சாதனை படைத்தார்.
சாதனை
அதைத்தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மலையின் 165 அடி உயரத்திலிருந்து கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு கயிறு மூலம் 55 விநாடிகளில் இறங்கிச் சாதனை புரிந்தார்.
இந்தநிலையில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியை ஏப்ரல் 5ஆம் திகதி ஆரம்பித்தார். ஏப்ரல் 8 ஆம் திகதிக்குள் அவர் 3,440 மீட்டர் உயரத்தைக் கடந்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரம்
இந்தநிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சிப்போர் மலையேறும் பயிற்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும், அல்லது குறைந்தது 5,500 மீட்டர் உயரம் மலையேற்றம் செய்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் மலையேறும் பயிற்சி படிப்பை மேற்கொகொண்டமையால் , லடாக்கில் உள்ள பனிமலையில் 6,496 மீட்டர் ஏறியதைத் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தகுதி பெற்றதாக முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.