Reading Time: < 1 minute

கனடாவின் விவசாய உணவு உற்பத்தியில், எல்லைக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து உணவு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லது அமெரிக்கர்கள் அல்லாத பயணிகளுக்கு எல்லை கட்டுப்பாடுகளை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இதில் இராஜதந்திரிகள், விமான ஊழியர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்பங்களுக்கு சில விதிவிலக்குகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், கனடா தனது எல்லைகளை எப்போது திறக்கும் என்பதை ட்ரூடோ குறிப்பிடவில்லை,

இதனால், சுமார் 50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து ரொறன்ரோ மொத்த உற்பத்தி சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் பாம்போர்ட் கூறுகையில்,

‘எங்கள் எல்லைகள் ஒரு குறுகிய காலத்திற்கு மூடப்பட்டால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கூட, பருவத்தில் பயிர்களைப் பெறுவதில் சிக்கல் இருக்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாமல் தனது நடவடிக்கையை நடத்துவது கடினம், ஏனெனில் அவர்கள் திறமையானவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக திரும்பி வருகிறார்கள்’ என கூறினார்.