Reading Time: < 1 minute
எயார் கனடா விமான சேவை நிறுவனம் விமானத்தில், கையில் சுமந்து செல்லும் பொதிகள் தொடர்பில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளது.
இதன்படி எயார் கனடா விமான சேவை நிறுவனம் பயணிகள் கையில் பொதிகளை சுமந்து செல்வதை தடை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
குறைந்த கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு விசேட கட்டணம் ஒன்றை அறவீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தாண்டில் இந்த புதிய கட்டண நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் இந்த கட்டண அறவீட்டு முறைமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதன்படி பயணிகள் கையில் சுமந்து செல்லும் பயண பொதிகளுக்கும் கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது.
பணப்பை, மடிக்கணினி போன்ற சிறிய பொருட்கள் கட்டணம் என்று எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.