கனடாவின் எயார் கனடா விமான சேவை பாலின ரீதியான மதிப்பளித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு திட்டமிடலை மேற்கொண்டுள்ளது.
இதன்படி பயணிகளை வரவேற்கும் போது பாலின குறிப்புகளை கூறி வரவேற்பதை கைவிட எயார் கனடா திட்டமிட்டுள்ளது.
அதாவது ‘பெண்கள் மற்றும் தாய்மார்களே’ என்று வரவேற்பதை நிறுத்தி பொதுவான வரவேற்பை வழங்கவுள்ளனர்.
திருநங்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ள அவர்கள், ஆண் அல்லது பெண் என்று அடையாளத்தை விழிப்பூட்டும் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவுள்ளனர்.
இருப்பினும், எயார் கனடா, பிற விமான நிறுவனங்களுடன் விமானங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தங்களை பெண் அல்லது ஆணாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அது கட்டாயமாக உள்ளது.
இது குறித்து செயின்ட் ஜான்ஸில் உள்ள திருநங்கைகளின் ஆர்வலர் ஜெம்மா ஹிக்கி கூறுகையில், கனடாவின் போர்ட்டர் எயார் லைன்ஸ் உட்பட ஒரு சில நிறுவனங்கள் பாலின நடுநிலையை முன்னிலைப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், எயார் கனடா உட்பட இன்னும் பல நிறுவனங்கள் பாலின சமநிலையை பின்பற்ற உறுதியளித்துள்ளன. இதன்படி எயார் கனடா தனது பயணிகளை வரவேற்கும் விடயத்தை திருத்தும் திட்டம் நல்ல முடிவாகும்” என்று கூறியுள்ளார்.