அனைத்து பொது உட்புற இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்க எட்மண்டன் நகர சபை தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 10-3 என்ற கணக்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் இந்த விதி நடைமுறைக்கு வருகின்றது. இதேவேளை இந்த விதியை மீறுபவர்களுக்கு 100 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம்.
புதிதாக இயற்றப்பட்ட துணைச்சட்ட விதி நகரத்திற்கு சொந்தமான வசதிகளுக்கு மட்டுமல்ல, தனியாருக்கு சொந்தமான வணிகங்களுக்கும் பொருந்தும்.
சில்லறை கடைகள், பொழுதுபோக்கு இடங்கள், ரெக் சென்டர்கள், வாடகைக்கு வாகனங்கள் மற்றும் பலவற்றில் முக மறைப்புகள் தேவைப்படும்.
இரண்டு வயதிற்குட்பட்ட எவருக்கும், சொந்தமாக முகக்கவசத்தை அணியவோ அல்லது அகற்றவோ முடியாதவர்களுக்கும், விஷேட தேவையுடையோருக்கும் இந்த விதி பொருந்தாது.