Reading Time: < 1 minute
எட்டோபிக்கோவில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாட்டின் குரோவ் மற்றும் ஆல்பியன் சாலை பகுதியில் இரவு 9 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஆணை கண்டுபிடித்தனர். பின்னர் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 416-808-2222 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு போலீசாருக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.