Reading Time: < 1 minute

கனடிய மக்கள் உளவியல் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவான கோபம், அதிருப்தியான மன நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் சில மாகாணங்களிலும் நிலவிவரும் காட்டுத்தீ அனர்த்தம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணர்வு ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சில அழுத்தங்களை மக்களினால் தாங்கிக் கொள்ள இயலவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த இயற்கை அனர்த்தங்கள் காரணமாக சிலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போது மக்கள் தங்களது உளச்சுகாதாரத்தை பேணிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.