Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலோகப் பொருட்கள் மீது வரி விதிக்க தீர்மானித்துள்ளார்.

நேற்றைய தினம் இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார். அமெரிக்கா உலோக பொருட்களுக்கு புதிதாக 25 வீத வரி விதிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

எனவே அமெரிக்காவிற்கு உலோகப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது இந்த வரி விதிக்கப்பட உள்ளது.

அமெரிக்காவிற்கு அதிக அளவில் உலோகப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் கனடாவும் உள்ளடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.