புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, பிரித்தானியாவில் இருந்து வருகைத்தந்தவர்களுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பதிவாகியுள்ளன.
குறித்த நாடுகளில் தொற்றுக்குள்ளானவர்கள் பிரித்தானியாவுக்கு பயணித்தவர்களோ அல்லது புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களோ அல்ல எனவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் குடியுரிமை அற்ற வெளிநாட்டவர்களை நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மேலும் வியாபார நடவடிக்கைகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான ஆசிய நாட்டவர்கள் மாத்திரமே ஜப்பானிற்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.