கட்டாரில் நடைபெற்று வரும் உலக்க் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றுள்ள கனடா அணிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை போட்டித் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுத் தொகை வழங்குகின்றது.
இதன்படி, முதல் சுற்றில் வெளியேறும் கனேடிய அணிக்கு 10.5 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. உலக கால்பந்தாட்ட தர வரிசையில் கனடா 41ம் இடத்தை வகிக்கின்றது.
பெல்ஜியம் மற்றும் குரோஷிய அணிகளுடனான போட்டிகளில் கனடா தோல்வியைத் தழுவியது.
இதன்படி, உலக கிண்ண போட்டித் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தகுதியை சுவிட்சர்லாந்து இழந்துள்ளது.
எதிர்வரம் வியாழக்கிழமை கனேடிய அணி மொரக்கோவுடன் பலப்பரீட்சை நடாத்த உள்ளது.
போட்டித் தொடரில் பங்கேற்கும் 32 அணிகளுக்கும் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை 440 மில்லியன் டொலர்களை வழங்கி உள்ளது.
இதில் அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறும் 17 முதல் 32ம் இடங்களை வகிக்கும் நாடுகளுக்கு 9 மல்லியன் பணப்பரிசு வழங்கப்பட உள்ளது.
மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் ஆயத்த செலவுகளுக்காக சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை 1.5 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளது.
போட்டித் தொடரில் வெற்றியீட்டும் அணிக்கு 42 மில்லியன் டொலர்களும், இரண்டாம் இடத்தை பெறும் நாட்டுக்கு 30 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட உள்ளன.