Reading Time: < 1 minute

சர்வதேச அரங்கில் கனடிய பல்கலைக்கழகங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் சர்வதேச பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் பிரகாரம் பல பல்கலைக்கழகங்கள் முன்னர் வகித்த நிலையை விடவும் பின் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டைம்ஸ் ஹையர் எடிவிகேஷன் என்ற அமைப்பினால் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரப்படுத்தல்கள் என்ற தலைப்பில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவின் சுமார் 40 வீதமான பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டில் வகித்த தர நிலைகளை விட பின் தள்ளப்பட்டுள்ளன.

கனடாவில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன.

உலகின் முதல் 50 பல்கலைக்கழகங்களில் கனடாவின் 3 பல்கலைக்கழகங்களும் முதல் 200 பல்கலைக்கழகங்களில் கனடாவின் 8 பல்கலைக்கழகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் 21ம் இடத்தை வகிக்கின்றது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.