Reading Time: < 1 minute
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 11கோடியே 74இலட்சத்து 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக ஒன்பது கோடியே 29இலட்சத்து 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.