உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், எப்படி இப்போதைக்கு போர் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லையோ, அதேபோல, உயர்ந்துள்ள விலைவாசியும் இப்போதைக்கு குறையப்போவதில்லை என கனேடிய நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
போர் காரணமாக கனடாவில் முதலில் பாதிக்கப்பட்டுள்ளது, எரிவாயு விலைகள்… அடுத்து உணவுப்பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குள் கனடா தானியங்கள் அடிப்படையிலான உணவுப்பொருட்களின் விலையில் உயர்வை சந்திக்கப்போகிறது என்று கூறும் Dalhousie பல்கலை பேராசிரியரான Sylvain Charlebois, அடுத்து கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பொருட்கள் விலை உயரும் என்கிறார்.
முதலில் இறைச்சி தயாரிப்புகள் பிறகு பால் பொருட்கள் விலை பாதிக்கப்படும் என்கிறார் அவர்.
பொதுவாக, உக்ரைனை விவசாய உணவுத்துறையின் ஆற்றல் இல்லம் என அழைப்பார்கள். அங்கு ஏராளம் பயிர்கள், குறிப்பாக கோதுமை, மக்காச்சோளம் முதலான உணவுப்பயிர்கள் பயிரிப்படும்.
உலக் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை, மக்காச்சோளம் முதலான பொருட்களில் 25 சதவிகிதம் அங்கிருந்துதான் வருகிறது.
ஆனால், இப்போது அங்கு போர் நிலவும் சூழலில் கருங்கடலில் உள்ள பல துறைமுகங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் உக்ரைன் மற்றும் பெலாரஸிலிருந்து வரும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.