ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் துருக்குகள் ஒருங்கிணைக்கப்படவில்லை என அனுபவம் மிக்க கனேடிய வீரர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் ஆதரவாக களமிறங்க சென்ற பல கனேடிய வீரர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியதாகவும், பலர் போரிட ஆயுதம் இல்லாமல், கனடா திரும்பும் நிலையும் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலான படைப்பிரிவு என அடையாளப்படுத்தப்படும் உக்ரைனின் பிராந்திய பாதுகாப்பு படையும் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்றே கனடிய வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச வீரர்கள் துணிவுடன் களமிறங்க வேண்டும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்ததன் பேரில் உலகெங்கிலும் இருந்து 20,000 வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்க உக்ரைன் சென்றுள்ளனர்.
ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள உக்ரைன் தவறிவிட்டதாக கனடாவின் முன்னாள் இராணுவ வீரர் 57 வயதான Paul Hughes தெரிவித்துள்ளார். போதிய இராணுவ உதவி இல்லாததால், உக்ரைன் போரில் பங்கேற்காமல் நாடு திரும்பியவர் இந்த Paul Hughes.
இவர் மட்டுமின்றி, பல கனேடிய வீரர்களும் உக்ரைன் தரப்பில் இருந்து எந்த ஆதரவும் கிட்டாத நிலையில், ஏமாற்றமடைந்ததாகவே குறிப்பிடுகின்றனர். ஆனால் கடந்த வாரம் உக்ரைனுக்கு வருகை தந்த உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், போர் பயிற்சி பெற்றவர்கள் கண்டிப்பாக உக்ரைனுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.
போர் காலங்களில் தன்னார்வலர்களின் உதவி மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ள ஓய்வு பெற்ற கனேடிய மேஜர் ஜெனரல் டெனிஸ் தாம்சன், இராணுவப் பயிற்சி மற்றும் போர்க்களத்தில் தொடர்பு கொள்ளும் திறன் கொண்ட தன்னார்வலர்கள் கிடைப்பது உண்மையில் அரிது என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, போரிட முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், தம்மால் இயன்ற உதவிகளை முன்னெடுத்து வருவதாக Paul Hughes தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்தாலும், உக்ரைன் மக்களுக்கு தமது தேவை இருக்கும் மட்டும் உக்ரைனில் வசிக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.